கோவை சிங்காநல்லூரில் மீண்டும் சந்தனமர வேட்டையை தொடங்கிய கடத்தல் மன்னன்கள்..! பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட அட்டப்பாகவன்டபுதூர் குட்டை தோட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட அட்டப்பாகவன்டபுதூர் குட்டை தோட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2019) துவங்கியதிலிருந்தே சந்தன மரக் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த கடத்தல்காரர்களை கண்காணிக்க போலீசார் ரோந்து பணிகள் மேற்கொண்டும் கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

மேலும் காட்டூர் காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, பந்தய சாலை காவல் எல்லை, குனியமுத்தூர் காவல் எல்லை, ஆர்எஸ்புரம் காவல் எல்லை என தொடர்ச்சியாக சந்தன மரத்தை வெட்டி கடத்திய கடத்தல்காரர்கள் கடைசியாக சிங்காநல்லூர் காவல் எல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் சந்தன மரக்கட்டைகளை கடத்திச் செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

இதையடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி சாய்பாபா காலனி பகுதியில் சந்தனமர வேட்டை நடைபெற உள்ளதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிங்காநல்லூர் காவல் எல்லை உட்பட பல்வேறு பகுதிகளில் சந்தனமர கடத்தலில் ஈடுபட்ட கோவிந்தராஜ், விஷ்ணு மற்றும் அன்பு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மரம் அறுக்கும் ஆயுதங்களான கோடாரி, ரம்பம் போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல தப்பியோடியவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மீண்டும் சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட அட்டப்பாகவன்டபுதூர் குட்டை தோட்டம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக நிலத்தின் உரிமையாளர் பாபு சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து அவர் கூறும்போது ;-

இந்த சந்தன மரம் சுமார் 25 ஆண்டுகள் பழமையானது. இதன் உயரம் சுமார் 20 அடி வரை இருக்கும். இது திட்டமிட்டு நோட்டமிடப்பட்டு திருடப்பட்டுள்ளது. இந்த சந்தன மரங்களை கண்டிப்பாக மீட்க வேண்டும். அதேபோல குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என போலீசாரிடமும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...