கோவையில் தனியார் பேருந்து நடத்துநருடன் ஏற்பட்ட மோதலில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவன் கைது!

கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்து வந்த கல்லூரி மாணவர் பேருந்திலிருந்து இறங்கி பேருந்தின் பின்புறத்தில் கல் வீசிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் பரவி வருகிறது.


கோவை: கோவை சிங்காநல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்து வந்த கல்லூரி மாணவர் பேருந்திலிருந்து இறங்கி பேருந்தின் பின்புறத்தில் கல் வீசிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் பரவி வருகிறது.

திருப்பூரில் இருந்து என்.ஆர்.டி என்ற தனியார் பேருந்து நேற்று மாலை கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சூலூர் ஆர்விஎஸ் பேருந்து நிறுத்தத்தில் ஆர்விஎஸ் கல்லூரியின் மாணவர் தினேஷ்(22) என்பவர் பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் கல்லூரி மாணவருக்கும் பேருந்து நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர் ஒண்டிபுதூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சாலையின் ஓரத்தில் கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் பின்புறத்தில் அடித்து தப்பியோடினார். இதில் பேருந்தின் பின்புற கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது.

இதையடுத்து பேருந்தின் நடத்துநரும் ஓட்டுநரும் கல்லூரி மாணவரை பிடிக்க முற்பட்டனர். ஆனால், அவர் தப்பியோடவே பேருந்தின் நடத்துநர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். இந்நிலையில், கல்லூரி மாணவர் பேருந்தின் மீது கல்வீசும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...