கோவையில் தேசிய சிறுபான்மை நலவாரிய துணைத்தலைவர் தலைமையில் சிறுபான்மை மக்கள் வருடாந்திர ஆய்வுக்கூட்டம்

கோவை: டெல்லியில் இருந்து கோவை வந்த தேசிய சிறுபான்மை நலவாரிய துணைத்தலைவர் ஜார்ஜ் குரியன் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி முன்னிலையில் சிறுபான்மை மக்கள் வருடாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

கோவை: டெல்லியில் இருந்து கோவை வந்த தேசிய சிறுபான்மை நலவாரிய துணைத்தலைவர் ஜார்ஜ் குரியன் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி முன்னிலையில் சிறுபான்மை மக்கள் வருடாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. இதில் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் அழைப்பியல் பொறுப்பாளர் இமாம் அபுதாஹிர் பத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டு மனுக்கள் அளிக்கப்பட்டது.

* CAA, NRC, NPR சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்

* கரும்புக்கடையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, உயர்நிலைப் பள்ளி, மாணவர்களுக்கு நூலகம், விளையாட்டுத் திடல், மற்றும் பூங்கா போன்ற அத்தியாவசிய அடிப்படை தேவைகள் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டும் தேசிய சிறுபான்மை நலத்துறை தலைவர் வருகையின் போதும் இதே வேண்டுகோள் விடுக்கப்பட்டது அவர் நினைவு கூர்ந்தார்.

* கோவை நகரில் *இஸ்லாமியர்கள் வழிபாட்டுத்தலம் பள்ளிவாசல் அமைக்க நிறைய தடைகள் உள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு அவற்றை நிவர்த்தி செய்து தர வேண்டும். குறிப்பாக ஏர்போர்ட் விமான நிலையம், ஹோப்ஸ், பீளமேடு, பிஎன் புதூர், வடவள்ளி, சாய்பாபா காலனி போன்ற பகுதிகளில் பள்ளிவாசல் கட்ட பல தடைகள் இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவரும் அவரை நேரில் வந்து சந்திக்குமாறு புதிய மனுக்கள் கொடுக்குமாறு கூறினார். அதன் அடிப்படையில் சில புதிய மனுக்கள் உடனடியாக கொடுக்கப்பட்டன. மேலும் சில வரும் காலங்களில் நேரில் சென்று கொடுப்பதாக கூறியிருக்கின்றோம்.

* மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கடந்த 4 ஆண்டுகளாக சரிவர கிடைக்கப் பெறவில்லை என்ற தகவல் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட்டது. மௌலானா அபுல் கலாம் ஆசாத் திட்டத்தின்படி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நிறைய தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மை தேசிய துணைத் தலைவர் கூறினார்.

* ஐஏஎஸ் ஆட்சித்துறை படிக்கும் சிறுபான்மை மாணவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பிஎச்டி உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மாதாமாதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் அவர்களது தகுதிக்கு ஏற்ப கல்வி உதவித் தொகை அளிக்கப்படும் என்றும் கூறினார்கள் ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக எதுவும் கிடைக்கப் பெறவில்லை என்ற தகவல் பதிவு செய்தோம், யாராவது தேவையுடைய தகுதியுடைய மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு கிடைக்காவிட்டால் உடனடியாக தம்மைத் தொடர்பு கொள்ளும்படி தேசிய சிறுபான்மை நல பிரிவு துணைத் தலைவர் கூறினார்கள் அவர்களது இமெயில் ஐடி [email protected] என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.

* வீடு இல்லாதவர்களுக்கு இடமிருந்தால் பிரதம மந்திரி திட்டத்தின்படி இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இடமும் வீடும் இல்லாதவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலமாக குடியிருப்பு வீடுகள் ஒதுக்கப்படும். அதற்கான படிவங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கிடைக்கும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார்.

* நீண்ட நாள் கோரிக்கையான இஸ்லாமியர்கள் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கரும்புக்கடை பகுதியில் அடிப்படை தேவைகளுக்கு பிரதம மந்திரி சிறுபான்மையினர் நல சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் *குனியமுத்தூர் குறிச்சி பகுதிகளுக்கு சுமார் 5.35 ஜந்தரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* கிறிஸ்தவ தேவாலயங்கள் கல்லறைத் தோட்டங்கள் கட்ட பல சிரமங்கள் உள்ளதாக கிறிஸ்தவ அமைப்பினர் கூறினர். உடனடியாக அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.



இக்கூட்டத்திற்கு கோவை மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி பகுதிகளிலிருந்து சர்வ சமயத் தலைவர்களும், இஸ்லாமிய கூட்டமைப்பினரும், பொள்ளாச்சி ஐக்கிய ஜமாஅத், மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத், மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...