கோவை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணி பாதுகாப்பு செய்ய வலியுறுத்தி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2006ம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தின் மூலம் உறுப்பு கல்லூரியாக கலை அறிவியல் கல்லூரி துவக்கப்பட்டது. இக்கல்லூரியில் தாழ்த்தப்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து முதல் நிலை பட்டதாரிகளாக மாறி வருகின்றனர். இக்கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இக்கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இக்கல்லூரி கடந்த ஆண்டு அரசு கலை அறிவியல் கல்லூரியாக தமிழக அரசால் மாற்றப்பட்டது. அரசு கல்லூரியாக மாற்றப்பட்ட நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களே ஒரு வருடமாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது தமிழக அரசு இக்கல்லூரிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களை இங்கு பணி மாறுதல் செய்து வருகின்றது. இதன் காரணமாக இக்கல்லூரியில் 15 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி வாசல் உட்புறம் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.