பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரம் அதிகரிப்பு - திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது 10 மணிக்கு துவங்கி 1:15 மணி வரை நடைபெறும் 15 நிமிடம் கேள்வித்தாளை படிப்பதற்கான நேரம் ஒதுக்கப்படும் என திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது 10 மணிக்கு துவங்கி 1:15 மணி வரை நடைபெறும் 15 நிமிடம் கேள்வித்தாளை படிப்பதற்கான நேரம் ஒதுக்கப்படும் என திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.



திருப்பூரில் முதலிபாளையம் மற்றும் 15 வேலம்பாளையம் பகுதிகளில் அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைக்க வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2ம் தேதி ஆரம்பித்து 21ம் தேதி வரை நடைபெறும் எனவும் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியிடப்படும் என்றார்.

அதேபோல, பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி துவங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறும் எனவும் தேர்வு முடிவுகள் மே 4ம் தேதி வெளியிடப்படும் எனவும் பதினோராம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.



மேலும், இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது எனவும் 10 மணிக்கு துவங்கி 1:15 மணி வரை நடைபெறும் என தெரிவித்த அவர், 15 நிமிடம் கேள்வித்தாளை படிப்பதற்கான நேரம் ஒதுக்கப்படும் என்று கூறினார்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேரும், பத்தாம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 பேரும், 11ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேரும் தேர்வு எழுத உள்ளதாக கூறிய அவர், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு மையங்கள் அதிகப்படுத்தப்பட்டு 3012 தேர்வு மையங்களாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...