கோவை: கோவையில் இன்று மாலை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெற இருக்கும் நிலையில் பாதுகாப்புப் பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவையில் இன்று மாலை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெறுகின்றது. இந்த பேரணியில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பங்கேற்கின்றார். செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இந்த பேரணி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்புப் பணிக்காக கோவை நகரில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேரணி துவங்கும் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஒரு பிரிவான ஆர்.ஏ.எப் எனப்படும் கலவர தடுப்பு படை பிரிவு போலீசாரும், கண்ணீர் புகை குண்டு வீசும் வாகனம் போன்றவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி அளவில் பேரணி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.