வால்பாறையில் வன விலங்குகள் அச்சுறுத்தலால் தனியார் பள்ளிகளில் ஆண்டு தேர்வு சிறப்பு வகுப்புகளை விரைந்து முடிக்க கோரிக்கை

கோவை: வால்பாறையில் வன விலங்குகள் அதிகம் உள்ள நிலையில், ஆண்டு தேர்விற்காக தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் வன விலங்குகள் அதிகம் உள்ள நிலையில், ஆண்டு தேர்விற்காக தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுத்தேர்விற்கு மாணவிகளை தயார்படுத்த தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் காலை 8 மணிக்கு துவங்கி 9 மணி வரை நடைபெறுகிறது.

வால்பாறையின் பல்வேறு தேயிலை தோட்டப்பகுதிகளிலிருந்து இதற்காக இவர்கள் காலை 6 மணிக்கெல்லாம் தயாராகி பேருந்தில் ஏறி 30 கிலோமீட்டர் வரை பயணம் செய்து வால்பாறை வந்து சேருகின்றனர். 



வால்பாறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி வரை சுமார் ஒன்னறை கிலோமீட்டர் வரை நடந்து பள்ளிக்கு செல்கிறார்கள். மாலை சிறப்பு வகுப்பு 6 மணிக்கு முடிந்த பின்னர் 7 மணிக்கு பேருந்தில் ஏறி வீடு திரும்பும் போது இரவு மனி 8 அல்லது 9 மணியை தாண்டுகிறது. 

வன விலங்குகள் அதிகம் உள்ள பகுதியானதால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் குழந்தைகள் வீடு திரும்பும் வரை மன அச்சமடைந்துள்ளனர். ஆகவே, சிறப்பு வகுப்புகளை விரைவில் முடித்து மாணவிகள் விரைவாக வீடு திரும்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் காலையில் மாணவர்களை புதிய பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதை தவிர்த்து, காந்தி சிலை வளாகத்தில் இறக்கி விட அரசுப் போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...