கோவை: வங்கி ஊழியர்களின் நியாயமான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பிரதமர் கவனத்திற்கு கொண்டு சென்று பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணவேண்டும் என கோவை மாவட்ட வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் கோவை எம்பி பி.ஆர்.நடராஜனிடம் மனு அளித்துள்ளனர்.

வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் அகில இந்திய அறைகூவலின்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரிடமும், வங்கி ஊழியர்களின் பிரச்சனைகள் பற்றி பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்ல மனு அளிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இன்று கோவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜனை நேரில் சந்தித்து கோவை மாவட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
அதில் வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். வாரம் ஐந்து நாள்கள் வேலை, அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம், மேலும் ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத்தை மேம்படுத்த வேண்டும்.அதோடு 2017 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய ஊதிய முறையினை அமல்படுத்த வேண்டும் . ஆனால் இதுவரை கடந்த 30 மாத காலமாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே உள்ளது. எனவே வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளை பிரதமரின் கவனத்திற்கு எடுத்து சென்று பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில் , கோவை எம்பியிடம் மனு அளித்துள்ளோம். நிச்சயம் எங்களின் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார் ன நம்புவதாக தெரிவித்தனர்.