கோவை: மக்கள் வசிக்கும் இடத்திலேயே ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம செவிலியர் சங்கத்தினர் சார்பில் கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைப்பெற்றது.

தமிழ்நாடு கிராம செவிலயர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் தெய்வாத்தாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிராம செவிலியர்கள் பலர் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் விரைந்து கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும், போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கர்ப்பிணித் தாய்மார்களின் பதிவு கணினி மூலம் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனவும், பொது மக்களுக்கு விரைவில் அவர்களுக்கான நலத்திட்டங்கள் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், வாரம் தோறும் நேரடி காணொளி மூலம் நடைபெறும் ஆய்வு கூட்டத்தை தவிர்த்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.