நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கைகளுக்காக அமைக்கப்பட்ட ஆவின் பாலக மையத்தை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆவின் நிர்வாக இயக்குனர் வள்ளலார் துவக்கி வைத்தார்.

உதகையில் பூ மாலை வணிக வளாகத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக திருநங்கைகள் நடத்தும் ஆவின் பாலக மையத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் ஆவின் நிர்வாக இயக்குனர் டாக்டர். வள்ளலார் திறந்து வைத்தார்.
இதையடுத்து பேசிய அவர், திருநங்கைகள் போன்று சமுதாயத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இது போன்று பாலகங்கள் மாநிலத்தில் தேவைப்படும் இடங்களில் அமைத்துத் தரப்படும் என்றார். தமிழகத்தில் பால் உற்பத்தி இதுவரை எட்டிராத சாதனை அளவை ஒரு வார காலத்தில் அடையவுள்ளதாக ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் கூறினார்.

மேலும், மாநிலத்தில் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் மாடு வளர்க்க திருநங்கைகள் முன் வந்தால் அதற்கான கடனுதவி அவர்களுக்கு செய்து தரப்படும் என்று கூறிய அவர், ஆவின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய பொருட்களை அறிமுகம் செய்து வருவதாக தெரிவித்தார்.