த.பெ.திகவினர் 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டதை கண்டித்து கோவையில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை: குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள த.பெ.தி.கவினர் பத்து பேரை விடுதலை செய்ய வேண்டும் என கோவையில் அனைத்து கட்சி அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை: குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள த.பெ.தி.கவினர் பத்து பேரை விடுதலை செய்ய வேண்டும் என கோவையில் அனைத்து கட்சி அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடந்த துக்ளக் இதழின் 50ம் ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் குறித்து உயர்வாகவும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவு செய்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பல அமைப்புகள் ரஜினியின் வீடு, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



இதில் தபெதிகவினர் 10 பேர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை கண்டித்து த.பெ.தி.க, எஸ்.டி.பி.ஐ, வி.சி.கே, தமிழ் புலிகள், ஏ.ஐ.சி.சி.டி.யு, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம், மே 17 இயக்கம், தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பொய் வழக்கு போடப்பட்டு உள்ளதாகவும் அதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தமிழக அரசு உடனே இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனவும் குண்டர் சட்டத்தை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...