தமிழகத்தில் ட்விட்டர் பதிவுகள் மூலம் ஹெச். ராஜா கலவரங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறார் - தமிமுன் அன்சாரி

திருப்பூர்: தமிழகத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்விட்டர் பதிவுகள் மூலம் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும், இதனை முன்கூட்டியே அரசு தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ட்விட்டர் பதிவுகள் மூலம் கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும், இதனை முன்கூட்டியே அரசு தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவின் எச்.ராஜா மற்றும் கல்யாணராமன் ட்விட்டர் மூலம் மதக்கலவரங்களை ஏற்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் தமிழகத்தில் கலவரங்கள் நிகழ்ந்தால் அதற்கு முழுக்காரணம் எச்.ராஜா மற்றும் கல்யாணராமனுமே காரணம் எனவும் அவர்கள் மீது தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

டெல்லியில் பாஜக தலைவர் கபில் மிஸ்ரா டிவிட்டருக்கு பிறகுதான் வன்முறை நிகழ்ந்தது. அது தமிழகத்தில் நிகழாமல் இருக்க முன்கூட்டியே காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என கூறிய அவர், மத்திய அரசின் கருப்பு சட்டங்களான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறும் வரை அனைத்து ஜனநாயக அமைப்புகளுடனும் அறவழியில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார்.

மேலும், மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வருகின்ற பிப்ரவரி 29ம் தேதி கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இதில் ஜனநாயக அமைப்பின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர் என தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...