கோவையில் இஸ்லாமியர் குடியிருப்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டதாக சிறைபிடிக்கப்பட்ட இளைஞர்கள்; போலீசார் விசாரணை

கோவை: கோவையில் இஸ்லாமியர் குடியிருப்பு பகுதிகளில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டதாக கருதப்பட்டு பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: கோவையில் இஸ்லாமியர் குடியிருப்பு பகுதிகளில் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 4 பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டதாக கருதப்பட்டு பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் போன்ற சட்டதிட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேசிய குடியுரிமை பதிவேடு இஸ்லாமியர்களுக்கு எதிரானது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் கோவை உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட இஸ்லாமிய குடியிருப்புகளில் ஆதார் கார்டுகள், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை 4 இளைஞர்கள் சேகரித்து வருவதாக பரபரப்பு ஏற்பட்டது. முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என அப்பகுதியில் உள்ள மக்களிடம் தகவல் பரவியது.



இதைதொடர்ந்து அப்பகுதிக்கு வந்த ஜமாத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட இளைஞர்களை சிறைபிடித்தனர். அதேபோல, இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் ஜமாத் அமைப்பினரிடம் முன்னுக்கு பின் முரணாக பல்வேறு பதில்கள் தெரிவித்துள்ளனர்.



இதையடுத்து சந்தேகமடைந்த ஜமாத் அமைப்பினர், உக்கடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் வில்சன் கேர் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் அந்த நிறுவனம் நோய் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனம் என்பதும் இதுதொடர்பான பொருட்களை சந்தைப்படுத்த பொதுமக்களை சந்தித்து கணக்கெடுப்பு எடுத்ததாகவும் தெரியவந்தது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...