கோவை: நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுக்கு சார்பாக இருந்தாலும் இல்லையென்றாலும் அவரது கருத்துக்கு முக்கியத்துவம் தருவதாலே அது பெரியதாகி வருவதாகவும் அதை ஒதுக்கி வைத்து விட்டால் என்ன? என்று நடிகர் பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திரைப்பட நடிகரும், இயக்குனருமான இரா.பார்த்திபன் எழுதிய கிறுக்கல்கள் கவிதை தொகுப்பு மற்றும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தின் நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா கோவை புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள ஒடிசி புத்தக கடையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அதிகமாக காதலிக்கும் மதிக்கும் இடத்தில் தலைகுனிவு ஏற்படும்போது கோபம் வருவதைப் போன்று ஆனந்த விகடன் விருதுகளில் ஒத்தசெருப்பு எந்த விருதுக்கும் தகுதி இல்லாதது என்பதுடன் ஆதரவு கேடயமும் தராது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அதை அவர்களது மேடையிலேயே கூறும் பேராண்மை தன்னிடம் இருந்தது. அது வைரலானதால் அதற்கு வருத்தப்பட்டேன். ஆனால், இனிமேல் விகடன் விருதுகள் வாங்கமாட்டேன் எனவும் இதைவிட சிறப்பான படம் எடுப்பேன் என்பதும் உறுதியான விஷயம் என தெரிவித்தார்.
ஆஸ்கார் அளவில் உள்ள அனைத்து விருதுகளும் கிடைத்திருக்கும் நிலையில் ஆனந்த விகடன் விருது கிடைக்காதது ஏன் என்பது தற்போது வரை தெரியவில்லை எனவும் சராசரி குடிமகனும் குறிப்பாக மாணவர்கள் அரசியல் மீது ஈடுபாடு காட்ட வேண்டும் எனவும் சினிமாவில் தன்னிறைவு அடைந்த பின்னரே அரசியலை பற்றி யோசிக்க வேண்டும் எனவும்,ரஜினி, கமல் போன்றவர்கள் அரசியலில் தற்போது போராடி வருவதாக கூறிய அவர், சினிமாவில் தன்னிறைவு பெற்ற பிறகு நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்றார்.
வாரிசுகளின் நடிகர் என்றாலும் கூட திறமை இருந்தால் மட்டுமே சினிமால் ஜெயிக்க முடியும் எனவும் இந்தியன் -2 படத்தில் நடந்த விபத்து தொடர்பான கேள்விக்கு இருநூறுபேர் இயங்கும் சினிமா படப்பிடிப்பில் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை பார்த்துக்கொள்ள நிச்சயம் ஒரு தனி மேலாளர் வேண்டும் என்று கூறிய அவர், இது தொடர்பாக தனி குழு அமைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுத உள்ளதாகவும் சமீபத்தில் விஜய் சந்தித்த வருமான வரி சோதனையை கடந்தது போன்று நிஜத்தில் ஹீரோவாக இருப்பவர் கண்டிப்பாக கடந்து தான் ஆக வேண்டும் என்று கூறினார்.
சி.ஏ.ஏ தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ரஜினி சட்டம் இயற்றியபிறகு போராடுவதில் எந்த பயனுமில்லை என்கிறார். ஆனால் போராட்டம் இல்லாமல் எதுவும் நடக்காது எனவும் இஸ்லாமியர்களின் போராட்டத்தில் உள்ள கூட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவது வருத்தமளிக்கிறது எனவும் சட்டம் இயற்றிய பிறகு அதை மாற்ற முடியாதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால், சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால். எதாவது போராட்டம் நடத்தி தான் ஆக வேண்டும் என்றவர், வெறுமனே பேசி பேசி வன்முறையாக்காமல் அதை எவ்வாறு ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என்றார்.
மேலும், ரஜினி பாஜகவுக்கு சார்பாக இருந்தாலும் இல்லையென்றாலும் அவரது கருத்துக்கு முக்கியத்துவம் தருவதாலே அது பெரியதாகி வருவதாகவும் அதை ஒதுக்கி வைத்து விட்டால் என்ன? என்று கேள்வி எழுப்பி பார்த்திபன், போராடும் மக்களுக்கு ஆதரவளித்து எதாவது செய்ய வேண்டும் என தோன்கிறது என்றும் அடுத்தாக இரவின் நிழல் என்ற படம் இயக்க உள்ளதாகவும் அதை ஒரே சாட்டில் எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.