திருப்பூர்: டெல்லி கலவரத்தை போன்று தமிழ்நாட்டிலும் கலவரம் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது எனவும் பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டும் என இஸ்லாமியர்கள் மனு அளித்துள்ள நிலையில், புகார் அளித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள நாய்களும், கழுதைகளும் காணவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

திருப்பூர் புஷ்பா தியேட்டர் பத்திரகாளியம்மன் கோவில் அருகில் இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் பயங்கரவாதிகளை வெளியேற்ற கோரி கோடி நாம ஜெப வேள்வியில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம், குடியுரிமை திருந்தச் சட்டம், மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எந்த பாதிப்பும் இல்லை எனவும் வேண்டும் என்றே தி.மு.க., கம்யூ, காங்கிரஸ் போன்ற கட்சியினர் தூண்டி விட்டு குளிர்காய்வதாக குற்றம்சாட்டினார்.

டெல்லி கலவரத்தை போன்று தமிழ்நாட்டிலும் கலவரம் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது எனவும் பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டும் என இஸ்லாமியர்கள் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். புகார் அளித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள நாய்களும், கழுதைகளும் காணவில்லை, இந்துக்கள் நாய் பிரியாணி, கழுதை பிரியாணி சாப்பிட மாட்டார்கள், எனவே இதுபற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.