கோவை: மர தொழிற்சாலைகளுக்கு வனங்களில் இருந்து பெறப்படும் மரத்தேவைகளை வேளாண் காடுகள் திட்டம் மூலம் 100 சதவீதம் தடுக்கப்பட்டு வனம் பாதுகாக்கபட்டுள்ளதாக தமிழக வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் கூட்டமைப்பின் நான்காவது கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் இந்தியாவில் உள்ள முன்னணி மரம் சார்ந்த தொழிற்சாலை நிர்வாகிகள், விவசாயிகள், வேளாண் அறிவியலாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள், நிதி நிறுவனங்கள் என கூட்டமைப்பை சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் திட்டம் குறித்தும் அதில் மரம் சார்ந்த பண்ணைய முறையை வலுப்படுத்தவும், வளர்க்கப்படும் மரங்களை சந்தைப்படுத்தவும், தடிமரங்கள் வளர்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் ஏற்படும் நன்மைகளையும் வேளாண் காடுகள் திட்டம் மூலம் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விவரித்து பேசினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணை வேந்தர் குமார், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த திட்டம் மூலம் தொழிற்சாலைக்கு தேவையான மரங்களை விவசாயிகளே உற்பத்தி செய்வதன் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுவதாகவும், மேலும் அவர்களின் உற்பத்திக்கு தகுந்த விலையையும் வேளாண் கல்லூரியே பெற்று தருவதால் விவசாயிகளின் வாழ்க்கை தரமும் உயரும் என தெரிவித்த துணை வேந்தர், தொழிற்சாலைகளுக்கு வனங்களில் இருந்து பெறப்படும் மரத்தேவைகளை வேளாண் காடுகள் திட்டம் மூலம் 100 சதவீதம் பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தடிமர தேவைகள் அதிகமாக உள்ளதால் அதனை வெளிநாடுகளில் இருந்தும் 80 சதவீதம் இறக்குமதி செய்யும் நிலை உள்ளதால் அதனை இங்குள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து அதனை உள்நாட்டிலேயே ஏற்படுத்த தொடர் ஆய்வு மற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.