பாஜக சார்பில் நாளை குடியுரிமை சட்ட திருத்த ஆதரவு பேரணி; இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி எஸ்டிபிஐ கட்சியினர் மனு

கோவை: பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடைபெற உள்ள பேரணியில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை காவல்துறை செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை: பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நடைபெற உள்ள பேரணியில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை காவல்துறை செய்து தரக்கோரி எஸ்டிபிஐ கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.



நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜமாத்தினர் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, கோவை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்துப்பாலம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம் அமைப்புகள் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை பேரணி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட உள்ளது.

இதனிடையே நாளை நடைபெற உள்ள பேரணியில் இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள், சொத்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது எனவும் ஏற்கனவே டெல்லியில் அமைதிப் பேரணியில் பெரும் கலவரங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் ஆகவே, கோவை மாநகர காவல் ஆணையாளர் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...