கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் மீண்டும் தீ விபத்து..! தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர்!

கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புகை மூட்டத்தினால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் அவதியடைந்துள்ளனர்.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புகை மூட்டத்தினால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கோவை வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த குப்பைக் கிடங்கில் கோவை நகரில் சேரும் 1000 டன் குப்பைகள் இங்கு தினமும் கொட்டப்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிப்பதற்காக தனித்தனி மையங்கள் இருந்தாலும் இந்த குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுகிறது.



கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 900 டன் குப்பை சேகரிக்கப்பட்டு தரம் பிரித்து மறு சுழற்சி செய்யப்படுகிறது. மேலும், தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகள் மலை போல் குவிக்க வைக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் இதனை வேறு இடத்திற்கு மாற்ற அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ பற்றியதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், வெள்ளலூர்‌ குப்பைக்கிடங்கில்‌ தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள்‌, மாநகராட்சி பணியாளர்களுடன்‌ இணைந்து போர்கால அடிப்படையில்‌ தீ அணைக்கும்‌ பணிகளில்‌ தீவிரமாக ஈடுபட்டுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்‌ குமார்‌ ஜடாவக்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, செயற்பொறியாளர்கள்‌, உதவி ஆணையாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...