கோவை: வால்பாறையில் மிளகு விளைச்சல் குறைவு மற்றும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் மிளகு விளைச்சல் குறைவு மற்றும் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தனி நபர்கள் மூலம் தேயிலை தோட்டங்களில் தேயிலைகளுக்கு மத்தியில் ஊடுபயிராக மிளகு பயிரிடப்பட்டுள்ளது. தனியார்களும் பல ஏக்கர் பரப்பளவில் மிளகு பயிரிட்டு பராமரித்து வருகின்றனர். இந்த ஆண்டு போதிய மழை கிடைக்காத காரணத்தால் மிளகு செடிகளில் பூக்கள் அதிகம் இல்லாத நிலை ஏற்பட்டது. மேலும் கடும் வெயில் காரணமாக பூக்கள் கருகின. இதனால் இந்த ஆண்டு மிளகு மகசூல் மிகவும் குறைந்தது.

மேலும், கேரள பகுதிகளில் அதிக மிளகு விளைச்சல் உள்ளதால் வால்பாறை கடைகளுக்கு மிளகு வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இங்கு விளையும் மிளகுக்கு விலை குறைவாகவே கிடைக்கிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.900 வரை விற்ற நிலையில் இந்த ஆண்டு ஒரு கிலோ ரூ 270க்கு விற்பனையாகிறது. மிளகு விளைச்சல் குறைவு மற்றும் போதிய விலை இல்லாதது விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.
