உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டம் நிச்சயம் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் செயல்படுத்தவிடமாட்டோம் ; நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என 5 எம்பிகள் உறுதி

திருப்பூர்: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக செயல்படுத்துவதால் விவசாயம் பாதிக்கப்படும் என பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தினார்கள். இந்த நிலையில் உயர் மின் கோபுர திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் செயல்முறை விளக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக செயல்படுத்துவதால் விவசாயம் பாதிக்கப்படும் என பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தினார்கள். இந்த நிலையில்  உயர் மின் கோபுர திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து  திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் செயல்முறை விளக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில், கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் , திருப்பூர் எம்.பி சுப்பராயன் ,கரூர் எம்.பி ஜோதிமணி , ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி , பொள்ளாச்சி சண்முகசுந்தரம் ஆகிய 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், அனுப்பட்டி பகுதியில் உயர்மின் கோபுரத்திற்கு கீழே செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.  உயர்மின் கோபுரத்தின் கீழே எம்பிகளை நிற்க வைத்து அவர்களின்  கையில் ட்யூப்லைட் கொடுக்கப்பட்டது. எந்தவித இணைப்பும் இன்றி அவர்கள் கையில் இருந்த ட்யூப்லைட் எரிந்தது. 



அதே போல், நாம் வீடுகளில் மின்சாரத்தை பரிசோதிக்க இண்டிக்கேட்டர் வைத்து பரிசோதிப்பதை போல நாடாளுமன்ற உறுப்பினகளின் உடல் மீது அந்த இண்டிகேட்டர் வைத்து பரிசோதிக்கப்பட்ட போது . அப்போது அனைவரின் உடலிலும் மின்சாரம் பாய்கிறது என்பதை உறுதிபடுத்துவதை போல , அந்த இண்டிகேட்டரில் லைட் எரிந்தது. அந்த இடத்தில் சீரியல் லைட் செட்டும் , ஏரியல் கம்பி மூலம் இணைக்கப்படும் போதே அந்த சீரியல் லைட்டும் எரிந்தது. இது போன்றவற்றை செயல்முறை விளக்கத்தின் மூலம் எம்பிகள் நன்கு அறிந்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை எம்பி பி.ஆர் நடராஜன், எந்த வித இணைப்பும் இன்றி கதிர்வீச்சின் மூலம் மின்சாரம்  பாய்வதை செயல்முறை விளக்கத்தின் மூலம் உணரமுடிந்தது. நிச்சயம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உயர்மின்கோபுரம் அமைப்பதை நாங்கள் 5 எம்.பி களும் கடுமையாக எதிர்ப்பதாக கூறினார். மேலும் இதன் மூலம் மக்களின்   உடல்நலம்  நிச்சயம் பாதிக்கப்படும்  என்பதால் மாநில அரசு தலையிட்டு இத்திட்டத்தில் இருந்து மக்களையும் விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதனை தொடர்ந்து பேசிய கரூர் எம்.பி ஜோதிமணி , சீரியல் லைட் ஏரியல் கம்பி வைத்து மட்டுமே எரிவதை பார்க்க முடிகிறது என்றும் , மக்களின் பாதுகாப்பு வரம்பை முறைப்படுத்த வேண்டும் என்பதோடு விவசாயிகளின் அரசாங்கம் என்று சொல்ல கூடிய மாநில அரசு , இதை கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். 

இவரைத்தொடர்ந்து பேசிய திருப்பூர் எம்.பி சுப்பராயன் , வளர்ச்சி திட்டம் மக்களுக்கு எதிராக உள்ளதால் மக்கள்அதனை எதிர்க்கிறார்கள் என்றும் , புதைவடமாக கொண்டு செல்வது சாத்தியம் இருந்தும் அதனை செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மின்சாரம் எங்களது உடலில் பாய்வதை இண்டிகேட்டர் சுட்டிகாட்டுகின்றது என்பதற்கு நாங்கள் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுமே சாட்சி என்பதோடு, நாடாளுமன்றத்தில் அனைத்து எம்.பி களோடு சேர்த்து பாரிவேந்தர் எம்.பி யும் கடுமையாக குரல் எழுப்பினார் என்றும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...