கோவை: உலக புற்று நோய் தினமான பிப்ரவரி 4-ந்தேதியிலிருந்து புற்று நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் கிரீன் டிரெண்ட்ஸ் சலூன் தனது `Shair' தலைமுடி நன்கொடை இயக்கத்தை துவக்கியது.

கார்ப்பரேட் நிறுவனங்களிடையே கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டத்தை கோவையில் கிரீன் டிரெண்ட்ஸ் துவக்கியுள்ளது.

இந்த திட்டம் நாடு முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், கோவை பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மிகுந்த ஆதரவு அளித்து தங்கள் முடியை நன்கொடையாக வழங்கினர்.

10 அங்குல முடியை நன்கொடை அளிக்கும் இந்த திட்டத்தில் பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் முடியை நன்கொடையாக வழங்கினர் ஆர்வத்துடன் புற்றுநோயாளிகளுக்கு உதவிடும் வகையில் முடியினை தானமாக வழங்கியோர்களுக்கு முடி நன்கொடை மற்றும் நம்பிக்கையின் அடையாளத்தை குறிக்கும் விதமாக முடி நீட்டிப்பு கிளிப் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கியது
இந்த நிகழ்வு குறித்து கவின்கேர் சலூன் பிரிவு வர்த்தகத் தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், ஒரு புற்று நோயாளி, தான் மட்டும் தனியாக போராடுவதில்லை என்பதையும், இந்த இயக்கத்தின் மூலம் உதவுவதே எங்களின் நோக்கம் என்பதை தெரியப்படுத்தும் வகையில் மேற்கொண்டுவருகிறோம். புற்றுநோயாளிகளுக்கு உதவ நினைக்கும் மக்கள் அவர்களின் முடியினை தானம் செய்ய சரியான இடம் இது என தெரிவித்தார். மக்களுக்கு ஒரு வித்தியாசமான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான வழியைக் கொண்டுவருவதற்கான தளத்தை வழங்குகிறது என கூறினார்.
மேலும் இது குறித்து கிரீன் டிரெண்ட்ஸ் யுனிசெக்ஸ் ஹேர் அன்ட் ஸ்டைல் சலூன் தலைமை செயல்பாட்டு அதிகாரி தீபக் பிரவீன் கூறுகையில், புற்று நோய் சிகிச்சையின் போது முடி உதிர்தல் என்பது வெளிப்படையான அறிகுறியாகும். செயற்கை கூந்தலால் செய்யப்பட்ட விக்குகளை நீண்ட நேரம் அணிய முடியாது. அதன் காரணமாக எரிச்சல் ஏற்படுவதோடு தலையிலும் அதிக சூடு ஏற்படும். எனவே மனித முடியில் இருந்து தயாரிக்கப்படும் விக்குகள் அணிவதற்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பதால் இவ்வகையில் புற்றுநோயாளிகளுக்கு உதவிபுரிவதாக தெரிவித்தார்.
மேலும் இயற்கையான விக் மிகவும் விலை உயர்ந்தது என்பதால் முடியாதவர்களுக்கு இலவசமாக வழங்கிவருவதாகவும் கூறினார். நன்கொடை வழங்க விரும்புபவர்களுக்கு அவர்களின் முடி மட்டும் குறைந்தபட்சம் 10 அங்குல நீளம் இருக்க வேண்டும். முடி நன்கொடை தர விருப்பமுள்ளவர்கள் அருகில் உள்ள கிரீன் டிரெண்ட்ஸ் சலூன்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளர்.
இதற்காக கிரின் டிரென்ஸ்ன் இணையதளமான mygreentrends.in மூலமாகவோ அல்லது 1800 4 20 20 20 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம் என தெரிவிக்கின்றனர்.