கோவை: கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இதில் மானாம்பள்ளி வனச்சரகத் திற்குட்பட்ட சின்னகல்லார் அணை பகுதியில் சுமார் 30 வயதான பெண் யானை ஒன்று சோர்ந்த நிலையில் சில நாட்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பது வனத்துறைக்கு தெரிய வந்துள்ளது.

இந்த தகவலை அறிந்தவுடன் உடல் நலம் குன்றிய பெண் யானையினை தொடர்ச்சியாக கண்காணித்துவந்தனர். இதில் பெண் யானையின் பின்புறம் மற்றும் பக்க வாட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதை வனத்துறை அதிகாரிகள் அறிந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் யானையின் உடம்பில் உள்ள தடயங்களை வைத்து பார்த்த போது, காட்டிற்குள் ஆண் யானைக்கும் பெண் யானைக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், ஆண் யானையின் தந்ததினால் பெண் யானையை குத்தி காயப்படுத்தியிருப்பதை வனத்துறை அதிகாரிகள் அறிந்து கொண்டனர். யானையின் மேல் காயத்தினை ஆற்றுவதற்காகவும் சிகிச்சை அளிக்கவும் முதுமலையிலிருந்து வனத்துறையின் சிறப்பு மருத்துவர் மனோகரன், தங்கராஜ் பன்னீர் செல்வம் வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் ஆகியோர் வந்து முதலுதவி மேற்கொண்டுவருகின்றனர்.காயத்தினை ஆற்ற மாத்திரைகள், சத்து மாத்திரைகள் போன்றவற்றை வாழைப்பழத்தில் வைத்து யானைக்கு அருகே வீசியபோது அதை காட்டு யானையும் சாப்பிட்டுள்ளது.

முதற்கட்ட சிகிச்சை அளித்ததை தொடர்ந்து வனத்துறையினர் பாதிக்கப்பட்ட பெண் யானையை தீவிரமாக கண்காதித்து வருகின்றனர். மேலும் யானையை சகஜ நிலைக்கு திரும்பும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.