கோவை ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ தகவல்‌ உரிமை சட்ட விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ தகவல்‌ உரிமை சட்ட விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்ட விழிப்புணர்வு முகாமில்‌ தகவல்‌ பெறும்‌ உரிமை சட்டப் பிரிவுகள்‌ சம்மந்தப்பட்ட விரிவான விளக்கத்தினை ஆணையர்‌ அவர்களால்‌ எடுத்துரைக்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ தகவல்‌ உரிமை சட்ட விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்ட விழிப்புணர்வு முகாமில்‌ தகவல்‌ பெறும்‌ உரிமை சட்டப் பிரிவுகள்‌ சம்மந்தப்பட்ட விரிவான விளக்கத்தினை ஆணையர்‌ அவர்களால்‌ எடுத்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திகுறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாடு தகவல்‌ ஆணையர்‌ முனைவர்‌.ஆர்‌.பிரதாப்குமார்‌ அவர்களால்‌ கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ முகாம்‌ நடத்தப்பட்டது. இம்முகாமில்‌ 50 வழக்குகள்‌ விசாரணைக்கு எடுத்துக்‌ கொள்ளப்பட்டன. விசாரணையின்‌ போது உரிய தகவல்கள்‌ வழங்காத பொதுத்‌ தகவல்‌ அலுவலர்கள்‌ மீது தகவல்‌ பெறும்‌ உரிமைச்சட்டம்‌ 2005 பிரிவு 20(1)ன்‌ கீழ்‌ நடவடிக்கை எடுப்பதற்கான உரிய விளக்கம்‌ கோரப்பட்டது.

மேலும்‌, தகவல்‌ உரிமை சட்ட விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்‌ நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு முகாமில்‌ தகவல்‌ பெறும்‌ உரிமை சட்டப் பிரிவுகள்‌ சம்மந்தப்பட்ட விரிவான விளக்கத்தினை ஆணையர்‌ அவர்களால்‌ எடுத்துரைக்கப்பட்டது. மேலும்‌, மேற்படி சட்டப்பிரிவுகள்‌ சம்பந்தமான கேள்விகள்‌ மற்றும்‌ சந்தேகங்கள்‌ எழுப்பிய பொதுத்‌ தகவல்‌ அலுவலர்களுக்கும்‌ உரிய பதில்‌, தெளிவுரைகள்‌ தொடர்புடைய குறிப்புகள்‌ ஆணையர்‌ அவர்களால்‌ வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக செய்திகுறிப்பில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...