கோவையில் மதுபான கடை உதவியாளரை பணம் கேட்டு தாக்குதல் நடத்திய அதிமுக பிரமுகரின் மகன்..! சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை: கோவை ஆலந்துறை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் அதிமுக பிரமுகரின் மகன் பணம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை ஆலந்துறை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் அதிமுக பிரமுகரின் மகன் பணம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இரவு நேரங்களில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதனால் இரவு நேரங்களில் மது வாங்க வரும் நபர்களுக்கும் பணியாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நிலவி வருகிறது. அதேபோல மாமுல் மோதல்களும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட ஆலந்துறை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் தர்மராஜின் மகன் ரஞ்சித் நேற்றிரவு சுமார் பத்து முப்பது மணிக்கு மதுபான கடை ஊழியர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது, அங்கிருந்த அலுவலக உதவியாளர் சசிக்குமார் பணம் தர மறுத்துள்ளதாக தெரிகிறது.



இதனையடுத்து, ரஞ்சித் மற்றும் அவருடன் வந்த நபர்கள் சசிக்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மதுபான கடை ஊழியர் சசிகுமாரை சக ஊழியர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து ஆலந்துறை போலீசார் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிமுக பிரமுகரின் மகன் மதுபானக் கடைக்குள் அடியாட்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...