கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நல பிரிவில் சமூக கார்டூன் ஓவியங்களை வரைந்த மாணவர்களுக்கு குவியும் பாராட்டு!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவில் குழந்தைகளை கவரும் அழகிய சமூக கார்டூன் ஓவியங்கள் சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி சார்பில் மாணவர்களால் வரையப்பட்டு வருகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவில் குழந்தைகளை கவரும் அழகிய சமூக கார்டூன் ஓவியங்கள் சந்திரன்ஸ் யுவா பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி சார்பில் மாணவர்களால் வரையப்பட்டு வருகிறது.



கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதேபோல, இந்த மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் நல பிரிவில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் சிகிச்சை பெற வருகின்றனர்.

இந்த சிறப்பு வாய்ந்த இந்த குழந்தைகள் நல மையத்தில் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் மனங்களையும் பெற்றோர்களின் மனங்களையும் கவரும் வகையில் தற்போது ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இந்த ஓவியத்தில் "இயற்கையான சூழல்" "பசுமையை நோக்கி செல்வோம்" என்ற கருத்து ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த ஓவியங்களை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் வரைந்து வருகின்றனர்.



மேலும், இந்த ஓவியங்கள் குழந்தை நலப் பிரிவில் சுமார் 5 ஆயிரம் சதுர அடியில் மூன்று தளங்களில் வரைய உள்ளதாகவும் மேலும் இந்த ஓவியங்கள் குழந்தைகளின் மனதை புத்துணர்வு ஆக்குவதுடன் நோயின் தன்மையைக் குறைக்கும் எனவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன், குழந்தைகள் நல பிரிவு தலைவர் பூமா, கிருஷ்ணா கல்லூரி மற்றும் யுவா பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் மாணவர்களின் ஓவியங்களை வாழ்த்தி ஊக்கப்படுத்தினர். மேலும் மருத்துவமனையில் உள்ள பெற்றோர்கள், மாணவ மாணவிகளின் ஓவியங்களை வாழ்த்தியதுடன் அவர்களை பாராட்டினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...