கோவை மாநகராட்சி மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில் 21 பேரின் கோரிக்கை மனுக்கள் ஏற்பு

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்களிடம்‌ 21 பேர்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ நடைபெற்ற மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ அவர்களிடம்‌ 21 பேர்‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார் ஜடாவத்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்களிடம்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சோந்த பொதுமக்கள்‌ 21 கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌. இதில்‌ சாலை வசதி, மின்விளக்குகள்‌, குடிந்‌ வசதி, சுகாதாரம்‌ போன்ற அடிப்படை வசதிகள்‌ குறித்தும்‌ மற்றும்‌ பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்களை அளித்தனர்‌.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையாளர் அவர்கள்‌, இம்மனுக்களின்‌ மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில்‌, உதவி ஆணையர்கள்‌ எம்‌.சுந்தாராஜன்‌ (பணியமைப்பு), வீ.சரவணன்‌ (கணக்கு), உதவி ஆணையர்‌ (வருவாய்‌) என்‌.அண்ணாதுரை, மண்டல உதவி ஆணையர்கள்‌ தி.ர.ரவி(தெற்கு), ம.செல்வன்‌ (கிழக்கு), செந்தில்குமார்‌ ரத்தினம்‌(வடக்கு), மகேஷ்கனகராஜ்‌ (மத்தியம்‌), நகர்நல அலுவலர்‌ கே.சந்தோஷ்குமார்‌, செயற்பொறியாளர்‌ (திட்டம்‌) எஸ்‌.ரவிச்சந்திரன்‌, நிர்வாக அலுவலர்‌ உஷாராணி (மேற்கு), செயற்பொறியாளர்கள்‌ வி.பார்வதி, டி.ஞஞானவேல்‌, ஆர்‌.சசிப்பிரியா, கணக்கு அலுவலர்‌ டி.லட்சுமி பிரபா (குடிநீர்‌ பிரிவு) வருங்கால வைப்புநிதி கணக்கு அலுவலர்‌ மாணிக்கம்‌ மற்றும்‌ மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌, பொதுமக்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...