மக்கள் நீதி மையத்தின் முதல் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணிச்செயலாளராக திருமதி மூகாம்பிகா ரத்தினம் நியமனம்

கோவை: மக்கள் நீதி மையத்தின் முதல் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணிச்செயலாளராக திருமதி மூகாம்பிகா ரத்தினம் நியமனம், கமல் அறிவிப்பு.

கோவை: மக்கள் நீதி மையத்தின் முதல் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணிச்செயலாளராக திருமதி மூகாம்பிகா ரத்தினம் நியமனம், கமல் அறிவிப்பு. 

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் கட்சியின் நிர்வாகத்தினை மேம்படுத்த பல்வேறு பொறுப்புகளை நியமித்துவருகிறார் கட்சியின் தலைவரான கமல்ஹாசன். 

இந்தநிலையில், கட்சியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பெண்கள் பலர் செயலாற்றிவருகின்றனர். அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் மகளிருக்கான பொறுப்புகள் அறிவிக்கப்படவிருப்பதாக கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூகத்தில் மக்கள் தொகை எண்ணிக்கையில் பாதிக்கு மேல் இருக்கும் பெண்களின், மனநிலையினை புரிந்து கொள்வது அவசியமான ஒன்று. எனவே, தமிழகம் முழுவதும் மகளிர் பொறுப்பாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள். அதன் துவக்கமாக முதல் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணிச்செயலாளராக திருமதி. மூகாம்பிகா ரத்தினம் நியமனம் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பி.இ பட்டதாரியான இவர், சமூகத்தில் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவது, சமூக சேவைகளில் ஈடுபடுவது போன்ற பன்முக தன்மை கொண்டவர் எனவும், தற்போது விவசாயத்திலும் தனது பெரும்பங்கினை ஆற்றிவரும் திருமதி மூகாம்பிகா ரத்தினம் , கட்சி வளர்ச்சிக்கும், கட்சியில் பெண்களுக்கான பங்களிப்பினை பெற்றுதருவதில் முக்கிய பங்கு ஆற்றுவார் என நம்புகிறேன் எனவும் கமல் தெரிவித்துள்ளார்.

கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இவருக்கு, மக்கள் நீதி மய்யக்கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது மக்கள் நீதி மய்யத்தின் முதல் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணிச்செயலாளராக பொறுப்பு ஏற்றுள்ள மூகாம்பிகா ரத்தினம் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பொள்ளாட்சி தொகுதியில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 59,693 வாக்குள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...