கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவலகக் கூட்டரங்கில், குடிநீர் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. குறிப்பாக மாநகராட்சியில் குறிச்சி, குனியமுத்தூரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை இணைப்பு திட்டப்பணிகளையும், மற்றும் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிநீர் குழாய் இணைப்பு பணிகளையும் துரிதமாகவும், தரமானதாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பணிகளையும், சாலைகளை செப்பணிடும் பணிகளின் போது போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் உடனுடக்குடன் மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி சுகாதாரப்பணியாளர்கள் தொய்வின்றி தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் ஆய்வுக்கூட்டத்தின் போது அறிவுறுத்தினார்கள்.

ஆய்வுக்கூட்டத்தினை தொடர்ந்து,கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் பதிப்பு பணிகள் நடைபெறுவதையும் மற்றும் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் பணிகளையும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.