கோவை: கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவின் போது உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அம்மாவின் பிறந்த நாள் விழா அவர்கள் இருக்கும்போது எப்படி கொண்டாடினோமோ அதே போல தான் எத்தகைய மாற்றம் இல்லாமல் இன்றும் கொண்டாடி வருவதாக தெரிவித்தார். மேலும் மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் காவிரி வேளாண்மண்டலம் போன்ற திட்டங்களை அம்மா நினைத்தது போல் எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருவதாக கூறினார்.
மேலும் தற்போது இஸ்லாமிய மக்களை போராட்டத்திற்கு தூண்டிவிட்டு அதன் மூலம் திமுக கட்சியினர் குளிர் காய பார்க்கிறார்கள். இத்தகைய செயல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது என்பதனை உணர்த்துகிறது. மேலும் தற்போது கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவை இல்லாமல் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. சட்டம் ஒழுங்கினை காப்பதில் அதிமுக அரசு முனைப்போடு செயல்பட்டு வருவதாக கூறிய அவர், .ஆனால் திமுக ஆட்சியில் அப்படியா இருந்தது ? என கேள்வி எழுப்பினார்.
நிகழ்ச்சிக்கு பின்பாக கோவை அரசு மருத்துமனைக்கு சென்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஜெயலலிதா பிறந்த தினமான நேற்று பிறந்த குழந்தைகளுக்கு 13 மோதிரம் மற்றும் 6 தங்க சங்கிலியை வழங்கினார்.