திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற தமுமுகவினர் 80க்கும் மேற்பட்டோர் கைது

திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் 80க்கும் மேற்பட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் 80க்கும் மேற்பட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ரயில் மறியல் போராட்டமானது இன்று அறிவிக்கப்பட்டிருந்தது.



அதன்படி, ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதனையடுத்து போராட்டக்காரர்கள் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டதோடு, டவுன்ஹால் மேம்பாலம் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர். 



இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற 80க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...