கோவை: கோவையில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் மூன்று போலி 200 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் திருவள்ளுவர் நகரில் உள்ள சூர்ய குமாரின் வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
பின்னர், சூர்ய குமாரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 3 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புடைய கள்ள ரூபாய் நோட்டுகளையும், அதனை தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்த போலீசார், சூர்ய குமாரை கைது செய்தனர்.
மேலும், கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட உதவியாக இருந்த கிதார் முகமது மற்றும் மகேந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.