கோவை: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் கோவை ஆத்துபாலத்தில் 6 வது நாளாக நள்ளிரவிலும் தொடர்ந்த போராட்டம் ஏழாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோவை: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் கோவை ஆத்துபாலத்தில் 6 வது நாளாக நள்ளிரவிலும் தொடர்ந்த போராட்டம் ஏழாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டு இரவு பகல் பாராமல் நடத்திவரும் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்கவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர் போன்ற சட்டங்கள் இஸ்லாமியர்களை மட்டுமல்லாமல் பிற மதத்தினரையும் பாதிக்ககூடியதாக உள்ளது. எனவே இந்தச் சட்டங்களை திரும்ப பெறும் வரை எங்களின் போராட்டம் தொடரும் என தெரிவிக்கின்றனர்.
இந்த சூழலில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு சட்டமன்றத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி., போன்ற சட்டங்களை திரும்ப வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதேபோல மக்கள் தொகை கணக்கெடுப்பில் இத்தனை ஆண்டுகள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எதிராக எந்த புதிய கேள்விகளையும் கேட்க அனுமதிக்க மாட்டோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தான் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதை அரசு புரிந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.