கோவை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இன்னும் ஆளுநர் ஒப்புதல் பெறாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்புலிகள் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.

மத்திய மற்றும் மாநில அரசிற்கு எதிரான முழக்கங்களோடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது தமிழ்புலிகள் கட்சியைச் சார்ந்த 24 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.