கோவை மாநகராட்சி அலுவல கூட்டரங்கில்‌ பெண்‌ குழந்தைகள்‌ பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்கும்‌ நிகழ்ச்சி

கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக்‌ கூட்டரங்கில்‌ மாநில பெண்‌ குழந்தைகள்‌ பாதுகாப்பு தின உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்களின்‌ தலைமையில்‌, அனைத்து அலுவலர்களும்‌, பணியாளர்களும்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலக்‌ கூட்டரங்கில்‌ மாநில பெண்‌ குழந்தைகள்‌ பாதுகாப்பு தின உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்களின்‌ தலைமையில்‌, அனைத்து அலுவலர்களும்‌, பணியாளர்களும்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.

உறுதிமொழி விபரம்‌ வருமாறு,

“இந்திய குடிமகனாகிய நான்‌ சாதி, மதம்‌, இனம்‌, மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல்‌ அனைத்து குழந்தைகளையும்‌ சமமாக நடத்துவேன்‌. எனது செயல்பாடுகளால்‌ எந்த ஒரு குழந்தையையும்‌ உடல்ரீதியாகவும்‌ மனரீதியாகவும்‌ பாதிக்காத வகையில்‌ கவனமுடன்‌ நடந்து கொள்வேன்‌. எனது கவனத்திற்கு வரும்‌ குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்‌ வன்முறைகள்‌ மற்றும்‌ எந்தவொரு பாதிப்பையும்‌ தடுப்பதற்கான முழு முயற்சியில்‌ ஈடுபடுவேன்‌. மேலும்‌, இதனை உரிய அதிகாரிகளின்‌ கவனத்திற்கு கொண்டு செல்வேன்‌. இன்றைய குழந்தைகள்‌ நாளைய தலைவர்கள்‌ என உணர்ந்து அவர்களின்‌ வளர்ச்சி மற்றும்‌ பாதுகாப்பிற்கு என்னால்‌ இயன்ற பங்களிப்பை அளிப்பேன்‌. குழந்தை திருமணம்‌ பற்றி தெரிய வந்தால்‌ அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும்‌ ஈடுபடுவேன்‌. நான்‌, குழந்தை தொழிலாளர்கள்‌ இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன்‌. இந்திய அரசியலமைப்புச்‌ சட்டம்‌ மற்றும்‌ ஐக்கிய நாடுகளின்‌ குழந்தைகள்‌ உரிமைகள்‌ மீதான உடன்படிக்கையில்‌ வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும்‌ கிடைக்கும்‌ வகையில்‌ செயல்படுவேன்‌ என உளமார உறுதி கூறுகிறேன்‌.” என்ற உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்களின்‌ தலைமையில்‌ அனைவரும்‌ ஏற்றுக்கொண்டனர்‌.



இந்நிகழ்ச்சியில்‌ உதவி ஆணையர்கள்‌ எம்‌.சுந்தாராஜன்‌ (பணியமைப்பு), வீ.சரவணன்‌ (கணக்கு), உதவி ஆணையர்‌ (வருவாய்‌) என்‌.அண்ணாதுரை, சட்ட அலுவலர்‌ அமுல்ராஜ்‌, மாநகராட்சி கல்வி அலுவலர்‌ ஆ.வள்ளியம்மாள்‌, செயற்பொறியாளர்கள்‌ வி.பார்வதி, ஆர்‌.சசிப்பிரியா, மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ ரெ.மதியழகன்‌, கணக்கு அலுவலர்‌ டி.லட்சுமி பிரபா (குடிநீர்‌ பிரிவு) மற்றும்‌ அனைத்து அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...