வரும் 28ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் குடியுரிமை சட்ட திருத்த ஆதரவு பேரணி - வானதி சீனிவாசன்

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், அச்சட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற 28ம் தேதி பேரணி நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், அச்சட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற 28ம் தேதி பேரணி நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அமலுக்கு வந்த பின்னர் இஸ்லாமிய மக்கள் காவல் துறை அனுமதியின்றி ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட பின்னரும் இந்திய முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பில்லை என தெளிவு கொடுத்த பிறகும் தமிழகத்தில் சுயலாபத்திற்காக இஸ்லாமிய சமூகத்தை தூண்டி விட்டு அரசியல் நெருப்பில் ஸ்டாலின் குளிர் காய்கின்றார் எனவும் இந்து கடவுளுக்கு எதிராக பேசுவதும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புவதும் தொடர்ந்து வருகிறது எனவும் திமுக சிறுபான்மை ஆதரவு என்ற பெயரில் தேசத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிடுகிறது என்று குற்றம்சாட்டிய அவர், பாகிஸ்தான் குரலில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இருப்பதாகவும் வன்முறைகள் ஆங்காங்கே நடைபெறுவதாக கூறிய அவர், இச்சட்டம் குறித்து உண்மைக்கு மாறான கருத்துக்களை முன்னெடுக்கும் இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வரும் 28ம் தேதி மாலை அனைத்து மாவட்ட தலை நகரங்களில் சி ஏ ஏ ஆதரவு பேரணி மற்றும் ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும் என்று கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...