ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் டெல்லியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் டெல்லியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சேலத்தில் நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், ஜெயலலிதா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து இருக்கின்றோம், பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய சிறப்பான நகரமாக கோவை, சென்னை நகரங்கள் விளங்குகிறது என தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது எனவும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் பெருமளவு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் டெல்லிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை எனவும் சி.ஏ.ஏ, என்.பி.ஆர் போன்றவற்றால் தமிழகத்தில் சிறுபான்மை மக்கள் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை என தெரிவித்த அவர், மக்கள் தொகை கணக்கெடுப்பு, என்.பி.ஆர் ஆகியவை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுவதுதான் என தெரிவித்தார். திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போதுதான் என்.பி.ஆர் சட்டம் வந்தது என கூறிய அவர், இந்த ஆட்சிக்கு இடையூறு செய்ய வேண்டும் என்பதற்காக தவறாக இது பரப்பப்பட்டு வருவதாக கூறினார்.

என்.பி.ஆர்யை பொறுத்த வரை மொழி, பெற்றோர் வசித்த இடம், ஆதார் உட்பட சான்றிதழ்கள் என மூன்று அம்சங்கள் கேட்கப்பட்டு இருக்கின்றது எனவும் இது கட்டாயம் அல்ல என மத்திய அரசு தெளிவு படுத்தி சொல்லி இருக்கின்றது என்று தெரிவித்த அவர் சிறுபான்மை மக்களிடம் தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் கடன் தொகை அதிகரித்துள்ளதற்கு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி கடன் வைத்தற்கு என்ன வெள்ளை அறிக்கை கொடுத்தனர் என கேள்வி எழுப்பினார். திமுக அரசு வைத்த கடனுக்கு தற்போது வரை இந்த அரசு வட்டி கட்டிக்கொண்டு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு திட்டம் செயல்படுத்துவதைப் போல இந்த ஆண்டு பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு தினம் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அடுத்து ஒரு வருடம் 3 மாதம் இந்த ஆட்சி தொடரும் எனவும் அதன் பின்பும் இந்த ஆட்சிதான் தொடரும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வராது எனவும் ஸ்டாலின் முதல்வர் கனவில் இருக்க வேண்டியதுதான் என கூறிய அவர், இந்த ஆட்சியில் நல்ல திட்டங்கள் அமல்படுத்தப்படுவதால் ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றார்.

போராட்டம் செய்ய அனைவருக்கும் உரிமையுண்டு எனவும் இந்த ஆட்சியில் யாருக்கும் அனுமதி கொடுக்காமல் இல்லை என கூறிய அவர், அதிக அளவு போராட்டங்கள் நடந்துள்ளது எனவும் ஊடகங்களை பற்றி வாய் கூசும் அளவிற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசி இருக்கின்றார் எனவும் கீழ்த்தரமான வார்த்தை பேசியதற்கு ஊடகங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டங்கள் கூட நடத்த வில்லை என தெரிவித்தார். திமுக ஆட்சியில் நிறையபேர் நீதிபதியானது திமுக போட்ட பிச்சை என ஆர்.எஸ்.பாரதி சொல்லி இருப்பது ஆணவமான செயல் எனவும் ஆர்.எஸ்.பாரதி பேசியதை மட்டுமாவது ஊடகங்கள் முழுமையாக வெளியிட்டு இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

கே.சி.பழனிச்சாமி அதிமுகவில் இல்லை எனவும் அவர் பல முறை பலவிதமான குற்றங்களுக்கு சிறை சென்றுள்ளார். அவர் கருத்துகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றவர், விவசாயிகளின் மீது அக்கறை இல்லாதவர் டிடிவி தினகரன் எனவும் குடிமராமத்து திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு வந்ததால் டிடிவி தினகரன், ஸ்டாலின் போன்றவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் முதல்வர் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தல் உடனடியாக வரும் வாய்ப்பில்லை எனவும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறிய அவர், 7 பேர் விடுதலை குறித்து திமுக எல்லா இடங்களிலும் பேசுகின்றது எனவும் ஆனால், கருணாநிதி முதல்வராக இருந்த போது, துரைமுருகன் அமைச்சராகவும், ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது நளினியை மட்டும் விடுதலை செய்தால் போதும் என்று சொன்னது திமுக எனவும் எனவே 7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு அருகதை இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...