திருப்பூர்: திருப்பூர் அருகே வங்கியின் ஜன்னலை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம்-தாராபுரம் சாலை கள்ளிப்பாளையத்தில் ஸ்டேட் பேங்க் வங்கியின் கிளை வங்கியானது செயல்பட்டு வருகிறது. இதனிடையே சனிக்கிழமை வங்கி பணிகளை முடித்துவிட்டு வங்கியை பூட்டி சென்ற அதிகாரிகள் இன்று காலை வங்கியின் உள்ளே சென்று பார்த்த போது ஜன்னல் உடைக்கப்பட்டு, வங்கியில் உள்ள லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
மேலும், வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வங்கி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை நடத்தினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாவட்ட எஸ்பி திஷா மிட்டல் வங்கி அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும், வங்கியில் கொள்ளை போன பணம் மற்றும் நகை மதிப்பு எவ்வளவு என்பது குறித்தும் வங்கி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதே வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றது குறிப்பிடத்தக்கது.