வால்பாறையில் காவல் அதிகாரியை தரக்குறைவாக பேசி தாக்க முற்பட்ட நபர் கைது

கோவை: வால்பாறையில் காவல் துறையினரைத் தரக்குறைவாக பேசி காவல்துறை அதிகாரியை தாக்க முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை: வால்பாறையில் காவல் துறையினரைத் தரக்குறைவாக பேசி காவல்துறை அதிகாரியை தாக்க முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.



கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஸ்டான்மோர் எஸ்டேட்டை சேர்ந்தவர் பிரபு. இவர் வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் உள்ள வெள்ளச்சாஈமி என்பவரின் கறிக்கடையில் தகாத வார்த்தையில் பேசி தகராறு செய்துள்ளார். இதையடுத்து, இறைச்சி கடைக்காரர் வெள்ளச்சாமி வால்பாறை காவல் நிலையத்தில் பிரபு மீது புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து வால்பாறை காவல்துறையினர் நேற்று பிரபுவை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து விசாரணைக்குப்பின் அவர் மீது 294 பி பிரிவின்படி வழக்கு பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிரபு காவல் துறையினரைத் தரக்குறைவாக பேசி காவல்துறை அதிகாரியை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.



இதையடுத்து அவர் மீது அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக 353 பிரிவின்படி வழக்குபதிவு செய்து வால்பாறை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே அனுமதியின்றி கள்ளச்சந்தையில் மது விற்றதாக வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...