கோவை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை, பெண்கள் பாதுகாப்பு தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
கோவை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை, பெண்கள் பாதுகாப்பு தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன் படி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாலியல் ரீதியான புகார்களை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி ஒன்றினை இன்று ஆட்சியர் கு. ராஜாமணி துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், மாவட்ட நிர்வாகம் , சமூக நலத்துறை மற்றும் காவல்துறை இணைந்து பாலியல் ரீதியாக ஏற்படும் குற்றங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

மேலும் புகார்கள் உறுதியாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை தண்டனைக்கும் உட்படுத்திகிறோம் என தெரிவித்தார்.
மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளை ஒன்றிணைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் ரீதியான பிரச்சனைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திவருவதாக கூறினார். இதோடு ஆட்சியரின் தலைமைக்கு கீழ் செயல்பட்டுவரும் விசாகா கமிட்டியில், பணிகளுக்கு செல்லும் பெண்கள் அளிக்கப்படும் புகார்களுக்கும் அதிகளவில் வருகின்றது என ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் கோவை மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக அவ்வப்போது தகவல் கிடைக்க பெறுகிறது. தற்போது அதுவும் குறைந்து உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் யார் புகார் அளித்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்தார்.