கோவை: இளைஞர் எழுச்சி நாளையொட்டி வரும் மார்ச் 1ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு கோவை மாநகர கிழக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது என மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்தின் செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான இளைஞர் எழுச்சி நாளையொட்டி, மார்ச் 1ம் தேதியிலிருந்து, அந்த மாதம் முழுவதும், மாவட்டம் முழுவதும், நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்றும், உள்ளாட்சித்துறையில் பணி ஒப்பந்தங்கள், டெண்டர்களை தனது நெருக்கமானவர்களுக்கு வழங்கி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணியை கண்டிப்பதோடு மட்டுமின்றி, கோவை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டையும், பல்வேறு துறைகளில் உள்ள ஊழல் முறைகேடுகளையும் கண்டித்து 11-3-20 அன்று டவுன்ஹாலில் உள்ள கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தை முற்றுகையிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மாநகராட்சி டெண்டர் விவகாரங்களில் எஸ்பி.வேலுமணியின் சகோதரர் எஸ்பி.அன்பரசன் தலையிடுவதற்கு கண்டனம் தெரிவிப்பது, கோவை மாநகராட்சியின் குடிநீர் வினியோக உரிமையை வெளிநாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், வார்டு வாரியாக குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவிப்பது, குண்டும் குழியுமான சாலையை சரி செய்யாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.