கோடி கோடியா கொள்ளையடிக்கும் அமைச்சர் வேலுமணி; ஆட்சியை கவிழ்த்து விடுவார் என முதல்வர் கேட்க பயப்படுகிறார் - முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி

கோவை: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளையடித்து இருக்கின்றார் எனவும் வேலுமணியிடம் இதை பற்றி கேட்டால் ஆட்சியை கவிழ்த்து விடுவார் என்று முதல்வர் பயப்படுவதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.


கோவை: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளையடித்து இருக்கின்றார் எனவும் வேலுமணியிடம் இதை பற்றி கேட்டால் ஆட்சியை கவிழ்த்து விடுவார் என்று முதல்வர் பயப்படுவதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கோவையில் அரசியல்வாதிகள் காவல் துறையின் அதிகாரத்தை கையில் எடுத்துகொண்டு செயல்படுவதாக தெரிவித்தார். கோவையில் ஜெயலலிதா சிலைக்கு நான் மாலை அணிவிப்பதை தடுப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பிய அவர், எனக்கு விதித்த தடையை தகர்த்து எறியும் வல்லமை உண்டு எனவும் கோவை நகரின் அமைதி கருதி எனது வீட்டிலேயே ஜெயலலிதா 72வது பிறந்தநாளை கொண்டாடுவதாக தெரிவித்தார்.

இ.பி.எஸ், ஒ.பி.எஸ் இருவரும் இப்போதுதான் தொண்டர்களை சந்திப்பதாக சொல்லி இருக்கின்றனர் எனவும் மாவட்ட ஒன்றிய வாரியாக சென்று கூட்டம் நடத்தும் போதுதான் கட்சியில் இருக்கும் பிரச்சினைகள் தெரியும் எனவும் எல்லா விவசாயிகளும் தன்னை போல வசதியானவர்கள் என இ.பி.எஸ் நினைத்து கொள்கின்றார் என கூறிய அவர், சேலம் மாவட்டத்திற்கு மட்டுமே முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுகின்றார் எனவும் இந்த ஆட்சியில் தென்மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றது என அவர் குற்றம்சாட்டினார்.

கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி 5 ஆண்டுகளில் ஏற்பட்டதாக அமைச்சர் வேலுமணி கோவை நகரில் விளம்பரம் செய்கின்றார் என கூறிய அவர், கடந்த 45 ஆண்டுகளில் அதிமுக ஆட்சி செய்த 27 ஆண்டுகளில் கோவைக்கு எதையும் செய்யவில்லை என அமைச்சர் வேலுமணி சொல்கின்றாரா? என கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியை இழிவுபடுத்திய அமைச்சர் எஸ்பி.வேலுமணியை கட்சியை விட்டு நீக்கி இருக்க வேண்டும் எனக்கூறிய அவர், வேலுமணியால் கோவை அதிமுகவில் கட்சிக்காரர்கள் இருப்பதை விட கான்டிராக்டர்கள்தான் இருக்கின்றனர் என்றார்.

தமிழகத்தில் சி.ஏ.ஏ போராட்டம் உக்கிரமாக இருக்க காரணம், மாநிலங்களவையில் சி.ஏ.ஏ விற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்ததுதான் எனக்கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி ஆகியோரை கட்சியை விட்டு விலக்கினால் சிறுபான்மையினர் ஆதரவு மீண்டும் கிடைத்து விடும் எனவும் அதிமுக இணையம் ஏலத்திற்கு வந்திருந்தது, அதை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதற்காக 10 ஆயிரம் கட்டி ஏலத்தில் எடுத்திருந்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.

என்னை கட்சியை விட்டு நீக்கியதாக வாய்மொழியாக சொல்கின்றனர் என கூறிய அவர், நான் அதிமுக இல்லை என்றால் எனது வழக்கை நீதிமன்றம் எப்படி ஏற்கும் எனவும் கேள்வி எழுப்பினார். என்னை கட்சியை விட்டு நீக்கியதாக அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி காட்டினால் நான் ஏற்றுக்கொள்கின்றேன் என கூறிய அவர், ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக அதிமுக செயல்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் செயல்பாடுகள் கோவையில் அறிவிக்கப்படாத தீவிரவாத செயல்பாடுகளைப் போல் இருக்கின்றது எனவும், ஊடகங்கள் பொது நிகழ்ச்சிகளை கூட நடத்த முடியாது எனவும் ஊடகங்கள் கட்சிக்காரர்களால் மிரட்டப் படுகின்றனர் என்றவர், அதிமுகவில் அதிகபட்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் எஸ்.பி. வேலுமணி எனவும் இந்த ஆட்சி முடிந்தவுடன் நிச்சயம் வேலுமணி சிறைக்கு செல்வர் எனவும் தெரிவித்தார். கோவை சிறையில் எதிர்க்கட்சியினரை விட அதிகமாக இருப்பவர்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள், வேலுமணியை எதிர்த்தவர்கள்தான் இருக்கின்றனர் என கூறிய அவர், அதிகாரிகளின் அதிகாரத்தை அமைச்சர்கள் கையில் வைத்துக் கொண்டு இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.

அதேபோல, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருக்க தகுதியற்றவர் எனவும் வேலுமணி சிறையில் இருக்க வேண்டியவர் எனவும் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு வேளாள கவுண்டர்களை எம்.பி.சி பட்டியலில் சேர்க்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய கே.சி.பழனிச்சாமி, சாதிய அரசியலை எடப்பாடி பழனிச்சாமி செய்கின்றார் எனவும் சி.ஏ.ஏ அதிமுகவின் கொள்கையாக இல்லாத போது அதற்கு ஆதரவாக முதல்வர் ஏன் இருக்கின்றார் எனவும் வரும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அதிமுக நிறுத்தாது எனவும் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் வேலுமணி பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளையடித்து இருக்கின்றார் எனவும் வேலுமணியிடம் இதை பற்றி கேட்டால் ஆட்சியை கவிழ்த்து விடுவார் என்று முதல்வர் பயப்படுகின்றார் என கூறிய அவர், பா.ஜ.கவின் பி-டீமாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...