கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் இன்று நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர் ஒருவர் மாடு முட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை செட்டிபாளையம் பகுதியில் இன்று நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொண்ட மாடுபிடி வீரர் ஒருவர் மாடு முட்டி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செட்டிபாளையம் அருகே கோவை ஜல்லிக்கட்டு சங்கமும், கோவை மாவட்ட நிர்வாகமும் இணைந்து மூன்றாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர்.இந்த போட்டியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 900 மாடுகளும், 820 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். இப்படியிருக்க இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களில் மாடு முட்டியதில் காயமடைந்த 772 வீரர்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், மேல் சிகிச்சை தேவைப்படும் 12 பேருக்கு கோவை அவினாசி சாலையில் உள்ள கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, கோவை அரசு மருத்துவமனையில் காயமடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இப்படியிருக்க, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (26) என்ற இளைஞர் மாடுபிடி களத்தில் மாடு முட்டியதில் இடது மார்பு அருகே பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.