கோவை: கோயம்புத்தூரை சுற்றி பல்வேறு தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள் என பல இயங்கிவருகின்றன. மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் பேருந்துகள் இங்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
கோவை: கோயம்புத்தூரை சுற்றி பல்வேறு தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள் என பல இயங்கிவருகின்றன. மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் பேருந்துகள் இங்கு முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் சுமார் 700க்கும் மேற்பட்ட அரசு நகர பேருந்துகளும், 200க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் பல்வேறு வழித்தடத்தில் இயக்கப்பட்டுவருகின்றன. ஆனால் இப்பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மக்களின் வாழ்க்கையினை சிறிதும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு பரவலாக கூறப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பணிகளுக்கு விரைவில் செல்ல வேண்டும் என்பதால் பயணிகள் அதிகளவில் தனியார் பேருந்தினை தேர்வு செய்கின்றனர். இப்பேருந்துகளை பெரும்பாலும் இளைஞர்கள் இயக்கிவருவதால் முறையான விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. நகரத்தில் அதிவேகமாக பேருந்தினை இயக்கும் போது விபத்துகளும் ஏற்படுகின்றது. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் தங்களின் டிரிப்பினை முடிக்க வேண்டும் என்பதற்காக முந்திமோதிக்கொண்டு வாகனத்தினை ஓட்டுகின்றனர். குறிப்பாக பெண்களை முன் இருக்கையில் அமர வைத்தும், செல்போன்களில் பேசி கொண்டு வாகனத்தை கவனக்குறைவோடு இயக்குவதால் பயணிகள் மிகுந்த அச்சம் அடைகின்றனர்.
பேருந்து ஓட்டுநர்களின் நடவடிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் புகார் அளித்தாலும், வருமானம் ஒன்றை மட்டும் கவனத்தில் கொண்டு பிரச்சனையை கண்டுகொள்வதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறி யும் செல்போனில் பேசியபடி வாகனத்தினை இயக்கும் ஓட்டுநர்கள் மீது புகார் தெரிவிக்க பயணிகளுக்கு வசதியாக, போக்குவரத்து அலுவலர் செல்போன் எண் மற்றும் காவல்துறை உதவி எண் பேருந்தின் உள்பகுதியில் எழுதி வைக்க வேண்டும், புகார் அளிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தபட்ட ஓட்டுனர் உரிமத்தினை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் சென்னையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளவாறு பேருந்தின் இடதுபுறமுள்ள இருக்கைகள் பெண்களுக்கும் ஓட்டுனரின் இடதுபுறம் மற்றும் ஓட்டுனரின் இருக்கைக்கு பின்புறம் ஆண்கள் அமரும் வகையில் மாற்றியமைக்க கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் சார்பில் மாவட்ட நிர்வாகம் மாநகர காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.