கோவை அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை: கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே கோவை ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக கோவை மாவட்ட நிர்வாகமும், கோவை ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து இப்போட்டிகளை நடத்தின. இந்நிகழ்ச்சியை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே கோவை ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக கோவை மாவட்ட நிர்வாகமும், கோவை ஜல்லிக்கட்டு சங்கமும் இணைந்து இப்போட்டிகளை நடத்தின. 



இந்நிகழ்ச்சியை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் 900 மாடுகளும், 820 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிப்பாய்ந்த மாடுகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். 



உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் மாடுகளும் இப்போட்டியில் களமிறங்கின. காளைகளை அடக்கும் காளையர்களுக்கும், அடக்க முடியாத காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகிறது. 



ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...