கோவை: மத்திய அரசிற்கு தெளிவான விளக்கம எதையெல்லாம் காட்ட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லாத போது இந்திய குடியுரிமைக்கு பெற்றோரின் பிறப்பு சான்றிதழையும் காட்ட வேண்டும் என்பது மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன.
கோவை: மத்திய அரசிற்கு தெளிவான விளக்கம எதையெல்லாம் காட்ட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லாத போது இந்திய குடியுரிமைக்கு பெற்றோரின் பிறப்பு சான்றிதழையும் காட்ட வேண்டும் என்பது மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுப்பெற்றுவருகின்றன.

இந்த நிலையில், கோவை ஆத்துப்பாலம் பகுதியில் 4 வதுநாளாக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் போராட்ட களத்தில் பேசிய சீமான், இந்தியா என்ற நாடு எப்போதும் இருந்ததில்லை, இனியும் இருக்க போவதில்லை என தந்தை பெரியார் சொல்லியிருந்தார்.
இதற்கு வழக்கு போடுவது என்றால் பெரியார் மீது தான் முதலில் வழக்கு போட்டு விட்டு அப்புறம் என் மீது போடட்டும் என தெரிவித்தார். இந்தியர்கள் யார் என கூட தெரியாமல் 72 ஆண்டுகளாக பல அரசுகள் ஆட்சி நடந்திவருவதால் தான் குடியுரிமை சட்டத்தினை கொண்டு வருகின்றனர் என கோவையில் சிஏஏக்கு எதிர்ப்பு போராட்டத்தில் சீமான் பேச்சு.
மேலும் இந்திய குடிமகன் என்பதற்கு எதையெல்லாம் காட்ட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லாத போது இந்திய குடியுரிமைக்கு பெற்றோரின் பிறப்பு சான்றிதழையும் காட்ட வேண்டும் என்கின்றனர். ஏர்வாடியில் உள்ள பைத்தியக்காரன் கூட இந்த மாதிரி செய்ய மாட்டார்கள் என பாஜக அரசினை விமர்சனம் செய்தார். போராட்டத்தின் மூலம் நாட்டை இப்படி பதட்டமாக வைத்திருப்பதால் தான் இந்தியன் ஏர்லைன்ஸ், எல்.ஐ.சி தனியாரிடம் விற்பனைக்கு வந்ததைப்பற்றி கூட யாரும் பேச வில்லை என கூறினார்.

குடியுரிமை சட்ட திருத்தம் என்பது இஸ்லாமியர் மக்களுக்கு எதிரானது அல்ல ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது என்பதை உணர வேண்டும் . பிரதமர் மோடி, அமித்ஷா,மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை முதலில் குடியுரிமை சான்றிதழை காட்ட சொல்லி இனி போராட வேண்டும் என கூறிய சீமான் இவர்களை போல பிராடுகாரர்கள் யாரும் இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
சி.ஏ.ஏ சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்கின்றார். கொரோனா வைரஸ் தமிழகத்தில் வரவில்லை என்றாலும் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்கின்றோம். அது போலவே சி.ஏ.ஏ வந்தால் பாதிப்பு என்பதால் தான் அதனை எதிர்கின்றோம் என்று சீமான் கூறினார். தமிழர்கள்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றனர். இங்கு யாரும் முகலாயர்களின் வாரிசுகள் அல்ல என தெரிவித்தார்.
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் நடைபெற்றுவருகிறது. இதன் மூலம் பலர் உயர் பதவி வகிக்கின்றனர் என குற்றம் சாட்டினார். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் நாம் தமிழர் தான் எதிரியாக இருக்கிறது என தெரிவித்தார்.