கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் சிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி; மேளதாளம் முழங்க நள்ளிரவு வழிபாடு

கோவை: கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் சிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சியானது பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டது.


கோவை: கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் சிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சியானது பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்டது. 



சுடுகாட்டில் மகாசக்தி மாசாணி அம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடைபெற்றது.

சிவராத்திரியை விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கோவை சொக்கம்புதூர் மயானத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடத்தப்படுவது வழக்கம். சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கபட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டது. 

கையில் அரிவாள், சூலாயுதம் போன்ற ஆயுதங்களுடன் மயான பூசையில் ஈடுபடும் பூசாரி மகாசக்தி மாசாணியம்மனின் களி மண் உருவத்தை சுற்றி ஆக்ரோசமாக நடனமாடியபடி பூசை செய்தார். இதைதொடர்ந்து, மாசாணியம்மனின் இருதயத்தியில் இருந்து கைபிடி மண்ணை எடுத்து, அதில் இருந்து மனித எலும்புகளை எடுத்து வாயில் கடித்தபடி மயான கொள்ளை நிகழ்ச்சியில் பூசாரி ஈடுபட பக்தர்கள் ஆரவாரத்துடன் மாயன கொள்ளை நிகழ்ச்சியை நள்ளிரவில் கண்டு பரவசமடைந்தனர்.

பின்பு மகாசக்தி மாசாணியம்மனின் உருவத்தின் இருதய பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை சொக்கம் புதூரில் உள்ள மகாசக்தி மாசாணியம்மன் கோவிலுக்கு கொண்டி சென்று அங்கு அந்த மண்ணை வைத்து பூசை செய்தனர். நள்ளிரவில் நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது சொக்கம்புதூர் பகுதி மக்களின் நம்பிக்கை .

இதே போன்று கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு நள்ளிரவு பூசைகளானது நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...