அவிநாசி சாலை விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுனர் நீதிமன்றத்தில் ஆஜர்; 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

திருப்பூர்: அவிநாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 19 பேர் பலியானதற்கு காரணமான லாரி ஓட்டுனர் ஹேமராஜ்ஜை போலீசார் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர்: அவிநாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 19 பேர் பலியானதற்கு காரணமான லாரி ஓட்டுனர் ஹேமராஜ்ஜை போலீசார் இன்று திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நேற்று பெங்களூரில் இருந்து எர்ணாகுளம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது கேரளாவிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மோதியதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாலை விபத்திற்கு காரணமான லாரியை ஓட்டி வந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், இன்று அவரை திருப்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 3ல் ஆஜர்படுத்தினர். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, லாரி ஓட்டுனரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...