கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளதாகவும் 72 நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு 72 சீர் வரிசைகளுடன் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தவுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் குனியமுத்தூர் அரசு பள்ளியில் மடிக்கணினி, மிதிவண்டி மற்றும் 10ம் வகுப்புக்கான வினா-விடை புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழங்கினார். இதில் குனியமுத்தூர், குளத்துப்பாளையம், சுண்டக்கமுத்தூர் அரசு பள்ளிகளை சேர்ந்த10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மூன்று அரசு பள்ளியை சேர்ந்த 391 பேருக்கு 15 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. 600 மாணவ-மாணவிகளுக்கு பத்தாம் வகுப்புக்கான வினாவிடை புத்தகங்களும் வழங்கப்பட்டது.
பின்னர் விழா மேடையில் அமைச்சர் வேலுமணி பேசுகையில், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள் துறை சார்ந்த வல்லுநர்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாகவும், மாணவர்கள் படிப்பில் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும் என்றார். விளையாட்டு போட்டிகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என பேசிய அவர், மாணவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு அதிகம் செய்து வருவதாகவும் கோவை மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
அதிமுக அரசு கல்வித்துறைக்கு தொடர்ந்து அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து வருவதாக கூறிய அவர், 34000 கோடி ரூபாயை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார் என்றும் கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற உள்ளதாகவும் இதில் கோவையை சேர்ந்த மாடுகளும் போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக கூறினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் கொண்டாட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளதாகவும் கோவையில் ஜெயலலிதா பிறந்தநாள் முன்னிட்டு 72 கர்ப்பிணி பெண்களுக்கு 72 வகை சீர் வரிசைகளுடன் வளைகாப்பு நடத்த பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் இந்த விழாவில் முதலமைச்சர் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவித்தார். நாளை மறுதினம் கோவையில் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது எனவும் சுமார் 2 இலட்சம் மக்கள் ஜல்லிக்கட்டை காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.