மேட்டுப்பாளையம் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்..! விவசாயிகள் கவலை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தோலம்பாளையத்தில் இன்று அதிகாலை நுழைந்த காட்டுயானைகள் கூட்டம் விவசாய விளைநிலங்களில் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தோலம்பாளையத்தில் இன்று அதிகாலை நுழைந்த காட்டுயானைகள் கூட்டம் விவசாய விளைநிலங்களில் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தோலம்பாளையத்தில் உள்ள மேல்பாவி வனத்தில் இருந்து வெளியேறிய காட்டுயானைகள் அங்கிருந்த சரஸ்வதி என்பவரது தென்னை தோப்பில் நுழைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது.



சுமார் நான்கு ஆண்டுகள் வரை வளர்ந்து பலன் தரக்கூடிய அளவில் இருந்த தென்னை மரங்களையும், அதன் குருத்து பகுதிகளை பிடுங்கி சேதப்படுத்தியதால் அந்த மரங்கள் மேலும் வளர முடியாது. எனவே, நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் ஜந்து லட்சத்திற்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ரங்கராஜ், பழனிச்சாமி என நான்குக்கும் மேற்பட்ட தோட்டங்களில் நுழைந்து வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும் காட்டுயானைகள் நாசம் செய்தது. இதனை கண்ட விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டினர்.

தோலம்பாளையம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் தற்போது காட்டுயானைகள் நுழைவது அதிகரித்து வருவதாக கூறிய பாதிக்கப்பட்ட விவசாயிகள், இதனை கட்டுப்படுத்த வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீட்டினை வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...