ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழா: துணை குடியரசுத்தலைவர் வருகையால் பாதுகாப்பு பணிகளுக்கு 5 ஆயிரம் போலீசார் குவிப்பு!

கோவை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ள துணை குடியரசுத் தலைவர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் என கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ள துணை குடியரசுத் தலைவர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் என கோவை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈஷா யோகா மையம் சார்பாக ஆண்டுதோறும் மகா சிவராத்திரி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு முன்னணி அரசியல் கட்சியினர், அதிகாரிகள், கலைஞர்கள் என பல தரப்பினரும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், இன்று(பிப்., 21) நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்ள உள்ளார். இதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர், கோவை அவிநாசி சாலையில் உள்ள பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

சுமார் ஒரு மணிநேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு நீலாம்பூர் புறவழிச்சாலை வழியாக மதுக்கரை சென்று கோவைப்புதூர் வழியாக பேரூர் சென்று ஈஷா யோகா மையம் சென்றடைய உள்ளார்.

இதைதொடர்ந்து மாலை 5 மணி அளவில் ஈஷா யோகா மையத்தை பார்வையிடும் துணை குடியரசுத் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். பின்னர் இரவு ஈஷா யோகா மையத்தில் தங்கும் அவர் சனிக்கிழமை காலை விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு செல்ல உள்ளார்.

துணை குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காகவும் ஈஷா யோகா மைய நிகழ்வின் பாதுகாப்பு பணிகளுக்காகவும் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா உத்தரவின் பேரில், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, மேற்கு மண்டல காவல் எல்லையில் உள்ள பல்வேறு மாவட்ட போலீசார் என கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...